Monday, October 31, 2011

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் கேள்விக்குறி

தற்போதைய நிலையை பார்க்கும் போது இலங்கை அணியிக்கு   எதிர்காலம் ஒன்று இருக்குமா என்று பார்க்க போனால் நிச்சயமா ஒரு கேள்வி குறிதான் நான் ஏன் இப்படி  சொல்றேன்   என்றால் தற்போது  கடந்த வேர்ல்ட் கப்  போட்டிகளுக்கு பிறகு இலங்கை அணியின் நிலைமை பலர் அறிந்த ஒன்றுதான்.

முரளி, மலிங்க சென்ற பிற்பாடு இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் கூட இலங்கை வெற்றி பெறவில்லை,தில்ஷனின் மிக மோசமான, சுயநலமான தலைமை  வகிப்பு , தெரிவுக்குழுவின் மிக மோசமான செயற்பாடு பழைய மூத்த வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு  இளம் வீரர் மதிவ்ஸ்க்கு தலைமை பொறுப்பு கொடுக்க அனுபவம் போதாதாம் என்ற கருத்து அனுபவத்தை விட திறமை பலமானது . அப்படி பார்க்க போனால் தில்ஷன் என்ன கிழித்து இருக்கார் .

திறமைக்கு, இளமைக்கு இலங்கை அணியில் வாய்ப்பு இல்லை அவங்க கூறுவதெல்லாம் அனுபவம்,மூத்த வீரர்கள், மற்றும் முகம் பார்த்து கொடுப்பது ( ஹேரத்,கண்டம்பி,சமர சில்வா,டில்ஹாரா ) இதற்க்கு உதாரணம்  இந்தியாவை பார்தாட்சும் திருந்த கூடாத இந்த தெரிவுக்குழு அதற்காக நான் சங்க, மகி போன்ற  வீரர்கள் வானம் என்று சொல்லவில்லை சிறப்பாக விளையாட தவறும் பட்சத்தில் தொடர்ச்சியாக அதிக வாய்ப்புக்கள் இளம் வீரர்களுக்கு வழங்க வேண்டும் என்றுதான் கூறுகிறேன் .சந்திமல் எதற்கு புறகணிக்க படுகிறார் ,தரங்க எதற்காக டெஸ்ட் போட்டிகளில் புறகணிக்க படுகிறார். இலங்கை பலமான அணி ,பலமான வீரர்கள் இருக்கிறார்கள் பிரச்சனை வீரர்களிடம் இல்ல தெரிவுக்குழு ???????????   


நான் கிரிக்கெட்டில்  அதிக ஆர்வம் கொண்டவன் சொல்லபோனால் அத  விட  வேற ஏதும் தேவையில்லை எனும் அளவுக்கு ஆர்வம் அதிலும் இலங்கை அணி என்றால் உயிர்  அடுத்த படியாக இந்திய ,பாகிஸ்தான் பிடிக்கும். அப்படி இருந்த எனக்கு கிரிக்கெடில் ஆர்வம் குறைய வில்லை இலங்கை அணி என்றால் சமீப காலமா வெறுப்பாக  இருக்கு நான்  கிரிக்கெட் பார்த்து பழகியது  என்று சொலவத விட ஆர்வம் வர காரணம் எல்லோருக்கும் பிடித்த சனத் ஜெயசூரிய தான் சில காலம் அவர் இல்லாத போட்டியை பார்க்க கூட தயாரில்லதவன் நான்.
 ஆனால் இப்போ  கிரிக்கெடில்  பக்குவபட்டுல்லன் என்று நினைகிறன் .

எப்ப பார்த்தாலும் இலங்கை தெரிவுக்குழு விடும் தவறுதான் எனக்கு இலங்கை அணியில் சம காலமா வெறுப்பு வர காரணம் ஆகிருகிறது  எனக்கு மட்டும் அல்ல என்னை போல் நிறைய பேருக்கு நிறைய மாற்றம் தேவை இலங்கை கிரிக்கெட் வளர வேண்டும். இது தனி ஒருவரின் விடயம் இல்ல பொது  விடயம் திறமைக்கு மட்டும் வாய்பு வழங்க பட வேண்டும்.

ஆனால் இலங்கை அணியில் எப்போ பார்த்தாலும் தெரிவு செய்யும் முறை வெறுக்கத்தக்கதாக  அண்மைய காலங்களில் காணப்படுகிறது. திறமைக்கு வாயப்பு வழங்கபடுகிறது என்பதை  விட  முகம் பார்த்துதான்  வழங்க படுகிறது என்பது என் கருத்து   இலஞ்சர்களுக்கு வாய்ப்பு கொடுக்கிறது  என்றால்  இலங்கை தெரிவுக்குளுக்கு ஏதோ நெருப்பில் கால் வேய்க்குரமாரி தான் இருக்கு.

 இலங்கையின் மிடல் ஆர்டர் எப்போ பார்த்தாலும் பலம் இழந்துதான் காணப்படும் நிலை வயது போனவங்களுக்கு ஓய்வு கொடுக்கும் என்னமோ நடவடிக்கையோ இருக்குற மாதிரி இல்ல 

இப்போ கொஞ்சம் வெளிப்படைய  சொல்றன்.
கண்டம்பி, சாமர சில்வா, சமரவீர   இவங்கதானம் இலங்கையின் மிடல் ஆர்டர் batsmans  ஆஹா இருக்கன்கலாம்   இவங்களில் சமரவீர கொஞ்சம் அதிக வயதனாலும் இப்போவும்  தகுதியானவர்தான் ஆனால் இப்போ  இலங்கைக்கு தேவை இளம் வீரர்கள் இந்திய அணியை பார்த்து அல்லது ஆஸ்திரலிய அணியை பார்த்து இந்த தெரிவுக்குழு கற்றுக்கொள்ள வேண்டாமா .

ஒரு கேப்டன் வைப்பது அணியை வெற்றிப்பாதைக்கு இட்டு செல்ல ஒழிய தோல்விக்கு இட்டு செல்ல அல்ல ஆனால் இலங்கை அணியில் எல்லமெய் தலைகீழ் 

இப்போ இந்திய அணியில் சொல்லபோனால் சகலரும் இளம் வீர்கள்  இலங்கை அணியல் எத்தனையோ இளம் வீரர்கள் இருக்கிறார்கள் உபுல் தரங்க, தினஷ் சந்திமால், அஞ்சலோ மேதிவ்ஸ், திமுது கருணாரத்ன,லஹிருதிரிமன்ன,நுவன் பிரதீப்,சமர கபுகேடற ,சமிந்த எறங்க ,சுராஜ் ரண்டிவ் ,மென்டிஸ்,கவுஷால் சில்வா,ஜீவன்  மென்டிஸ்,அஜந்தா மென்டிஸ் ,சீகுகை பிரசன்னா,திச்ர பெரஹர, மற்றும் லசித் மலிங்க   இவர்கள் ,விளையாடி கொண்டு இருபவங்க  ஆனால் இதில் திறமையான வீரர்கள் இருக்க 11  பேருக்குள்  இவர்களில் பலர் விளையாடுவதில்லை.   

இன்னும் வாய்ப்புக்காக எவ்வளோ சிறந்த வீரர்கள் இருக்காங்க ஆனால் வாயப்பு கொடுக்கவெய் மாட்டோம் என இலங்கை தெரிவுக்குழு என ஒரு காழிலில் நிக்குது. இல்ல அப்படிதான் என்ன தோணுது மிஹட் சிறந்த 1st கிளாஸ் விருது பெற்ற  பாணுக்க ராஜபக்ஷ(19 ) ,ராமித் ரம்புக்வெல்ல(19 , ரொமேஷ் புத்திக்க(20), சுபசிங்க்ஹி  முடியன்செலகே  அஷன்  ப்ரியஞ்சன்(22 ),கோஷல குலசேகர, செரசிங்க்ஹி  பதிரனகே  சசிதர  சதுரங்க(24) , கனிஷ்க  கிஹன்  அல்விடிகள (24 ) இப்படி நிறைய வீர்கள் இருக்கார்கள் வரும் பதிவுகளில் அவர்களும் அவர்களுடைய  சிறப்புக்களும் இடலாம் என்று எண்ணி இருக்கன். வயது ஒரு பிரச்சனை இல்லை திறமை முக்கியம் தொடர்ந்து மூத்த வீரர்கள் மட்டும் விளையாடின இலங்கை அணிக்கு  எதிர்காலம்  இருக்கிறதா  கேள்வி எழும்பத்தான் செய்யும்.

இப்போ நான் சொல்ல நினைத்த முக்கியமான விடயங்களா மட்டும் வெளிபடையாக   கூறுகிறன் 

1 வது  எல்லா இளம் வீரர்களுக்கும் வாய்பு வழங்க நான் சொல்ல வில்லை திறமைக்கு மட்டும் வாயப்பு கொடுங்க அனுபவம் முக்கியம் ஆனால் அதை மிஞ்சக்குடியது திறமை உதாரணம் சச்சின்,விராத் க்ஹோலி ,குமார் சங்ககர ,மகில ஜெயவர்டின ,மதிவ்ஸ் இவர்கள் இதற்க்கு உதாரணம் முகம் பார்த்து (தில்ஷனுக்கு கேப்டன் பதவி கொடுத்தால் போல் ) கொடுப்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். எங்களுக்கு இலங்கை அணியின் எதிர் காலம் முக்கியம் 

தொடர்ந்து  வயதானவங்க எப்படா சரியாய் செய்வாங்க என்று  வாய்ப்பு கொடுப்பதை முதலில் தவிர்க்க வேண்டும் இளம் வீரர்கள் எங்களிடம் அதிகம் இருக்காங்க அவர்களுக்கு சின்ன வயதில் வாய்ப்பு கொடுப்பது அணிக்குத்தான் ஹெல்தியாக அமையும். 

2வது  கேப்டன் பதவி மாறவேண்டும் திறமை மட்டும் நோக்கப்பட வேண்டும் அதற்கு தகுதி மேதிவ்ஸ் என்பது எனது கருத்து





 3வது எனது கருத்துப்படி இந்த அணியை நான் விரும்புகிறான் தரங்க,கபுகேடற,சந்திமால்,சங்க,மகி,மேதிவ்ஸ்,பானுக,ஜீவன்,எறங்க,மலிங்க,மென்டிஸ் ,நுவன் பிரதீப்,குலசேகர,ரண்டிவ்,லஹிறு,திமுது ,பரணவிதான,கௌசல் சில்வா, தமிக்க பிரசாத்,சானக்க வேலகேடற,  இத்துடன் வர இருக்கும் நான் மேல சொன்ன வீரர்களையும் இணைத்துக்கொள்ளலாம்.


எனது இப்பதிவுக்கு காரணம் இலங்கை அணியை பாதாள நிலைக்கு கொண்டு போக விடாமல் பாதுகாக்கும் எண்ணம் மட்டுமெய் ஒழிய யார் மனதயும் புண் படுத்தும் நோக்கம் இல்லை தவறுகள் இருந்த சுட்டிகாட்டுங்க பதிவை மற்றவங்க பார்க்கும் படி செய்தித்தாள் தான் இந்த பதிவு பலரை சென்று அடைந்து நமது நோக்கம் இலங்கை அணியை பாதுகாக்கலாம்.